தனுஷின் ரசிகர்களான ஸ்பெயின் நாட்டு மக்கள்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. தற்போது பிரஞ்ச்- ஆங்கில திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெர்னி ஆப் ஃபக்கிர்’ திரைப்படம் மூலம் தெரு வித்தைக்காரன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து ஸ்பெயின் நாட்டு ரசிகர்களையும் தனுஷ் கவர்ந்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கிறார்.

ரோமன் பியுர்டோலஸ் எழுதிய நாவலின் திரைவடிவமான இப்படம் இந்தியாவிலிருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெரு வித்தைக்காரன் பற்றிய கதையாகும்.மேலும் உலகம் முழுவதும் குடியேறிவர்களின் பிரச்சனைகளையும் இப்படம் விவாதிக்கிறது.

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வெளியாகிய.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இயக்குநர் கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.

தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெர்னி ஆப் ஃபக்கிர்’ திரைப்படம் ஸ்பெயினில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, ‘ஸ்பெயினின் அன்பில் தனுஷ் ‘ என பதிவிட்டுள்ளார்.

அதற்கு தனுஷ் நன்றி தெரிவித்து இதனை சாத்தியமாக்கியதே நீங்கள் தான் கென் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழில் ‘ வாழ்க்கையை தேடி நானும் போறேன்’ என்ற தலைப்பில் விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது.

Exit mobile version