2 நாசா விண்வெளி வீரர்களுடன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் , அமெரிக்காவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும், எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து, 2 நாசா விண்வெளி வீரர்களை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளன. அமெரிக்க மண்ணிலிருந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களுடன், குறிப்பாக, தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து அனுப்பப்பட்ட முதல் ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ஆகும்.
இந்திய நேரப்படி நள்ளிரவு சுமார் ஒன்றரை மணியளவில், விண்வெளி வீரர்கள் ராபர்ட் பென்கென் மற்றும் டாக்லஸ் ஹர்லே உடன், இரண்டு நிலைகளை கொண்ட இந்த ராக்கெட், கென்னடி ஏவுதளத்தில் இருந்து பயங்கர நெருப்பு மற்றும் புகையை கிளப்பியபடி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீறிப்பாய்ந்தது.