விண்வெளி ஆராய்ச்சி : துணிசியா நாட்டுடன் இஸ்ரோ ஒப்பந்தம்

விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக இஸ்ரோ துணிசியா நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இஸ்ரோ சந்திராயன்-2 செயற்கைக்கோள் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் ((gaganyann)) போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வு பணிகளை இணைந்து மேற்கொள்ள துணிசியா நாட்டுடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பெங்களூரூ இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில், இஸ்ரே தலைவர் சிவன், துணிசியா நாட்டின் தூதர் நெஜ்மெதின் லக்கலுடன் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

Exit mobile version