அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இன்று விண்ணில் பறக்கிறது.
விண்வெளிக்கு செல்வதற்கான கவுண்டவுன் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதற்காக கஜகஸ்தானில் உள்ள பைக்கனூர் ஏவுதளத்திற்கு கொண்டு வரப்பட்ட விண்கலமானது ஏவுதளத்தில் பொருத்தப்பட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் ஸ்கோவர்ட்சோவ், அமெரிக்க வீரர் அண்ட்ரூ மோர்கன் மற்றும் இத்தாலி வீரர் லூகா பார்மிட்டனோ ஆகியோர் இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்கின்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.