தென்மேற்கு பருவமழை நாளை முதல் மெல்ல, மெல்ல குறைய துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கியமான பருவமழை என கருதப்படும் தென்மேற்கு பருவ மழை கடந்த 4 மாதங்களாக நீடித்து நல்ல மழை பொழிவை தந்தது. இந்நிலையில் இந்த பருவமழை நாளை முதல் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 20ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட நிலை காணப்படும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.