தென்மேற்கு பருவமழை சராசரியாக இருக்கும்…

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரியாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான பருவ மழை காலத்தில் பெய்யும் மழையின் அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் – செப்படம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையின் அளவு சராசரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தென்மேற்குப் பருவ மழை சராசரியாக 96 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவே பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version