கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 112.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 113.60 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 1272 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version