கடந்தஆண்டை விட 9.35 சதவீதம் தென்னக ரயில்வே வருவாய் அதிகம்

தென்னக ரயில்வே கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இதுவரை 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ் ரெஸ்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் 70வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ்ரெஸ்தா தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் பேசிய அவர், ஐ.ஆர்.டி.சி சர்வே படி ரயில்கள் சுகாதாரத்தில் தெற்கு ரயில்வே முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறினார். கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வே 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக குல்ஸ்ரெஸ்தா தெரிவித்தார். இது கடந்த ஆண்டை விட 9.35 சதவீதம் அதிகம் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version