நீலகிரி மலை ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை உள்ள மலைப்பாதையில் ரயிலில் பயணம் செய்ய உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 70 சதவீத பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் நீராவி இன்ஜினில் தண்ணீர் நிரப்ப வனப்பகுதிகள் ரயில் நிறுத்தப்படும் போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் முயற்சி மேற்கொள்வதால் அசம்பாவித சம்பவம் நடக்க அதிக வாய்ப்பிருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இன்று முதல் மலை ரயிலில் ஜன்னல் வழியாக வெளியே வந்து செல்பி எடுக்கும் முயன்றாலோ, மலை ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொண்டால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.