தெற்கு ரயில்வேக்கு அபராதம் மூலம் ரூ. 182.56 கோடி வருவாய்

முன்பதிவுகளை ரத்து செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை மூலம் 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி 2017-18ஆம் நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஆயிரத்து 205 கோடியே 96 லட்சம் ரூபாயும்

2018-19ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 852 கோடியே 50 லட்சம் ரூபாயும் வருவாயாக ரயில்வேத் துறைக்கு கிடைத்துள்ளது.

இதேபோல் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 5 ஆயிரத்து 366 கோடியே 53 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் ரயில்வே நிர்வாகம்,

குறிப்பாக 2018-19ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு 182 கோடியே 56 லட்சம் ரூபாய் அபராதம் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.

தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச ஆகிய மாநிலங்களில் அபராதத்தின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் 5 மடங்காக அதிகரித்துள்ளது.

Exit mobile version