பராமரிப்பு பணி காரணமாக இன்று 19 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே

பராமரிப்பு பணி காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் பொறியியல் பணி காரணமாக சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் 19 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரையிலிருந்து – வேளச்சேரி செல்லும் ரயில்கள் காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 வரையிலும், அதே போல வேளச்சேரியில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் காலை 8.10 முதல் மதியம் 2.10 மணி வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version