வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தெற்கு, உள் மாவட்டங்களின் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
தமிழகத்தின் தென் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், நாமக்கல், மதுரை, வேலூர், கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைப் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைப்பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.