தென் ஆப்பிரிக்காவில் கருப்பின இன மக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா சுதந்திரம் பெற்ற பிறகும் வெள்ளையர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் நீண்ட போராட்டத்தின் பலனாக கருப்பின மக்களின் உரிமை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டு வந்தது. அதில், குறிப்பாக அவர்களுக்கு வாக்குரிமை பெற்று தரப்பட்டது. இதன் காரணமாகவே நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் தேசியத் தலைவராக போற்றப்படுகிறார். 1990 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, அனைத்து தரப்பினரும் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி நடந்த பொது தேர்தலில் கருப்பின மக்கள் முதன் முதலாக வாக்களித்து தங்கள் உரிமையை நிலை நாட்டினர். இந்த உரிமை வழங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தென்னாப்பிரிக்க மக்கள் கொண்டாடி வருகின்றனர்.