தீயணைப்பு துறையினர் சார்பில் தென் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்

தேனியில் தமிழ்நாடு தீயணைப்பு துறையினர் சார்பில் தென் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகளை தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார். மதுரை தென் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணக்குமார் ஒலிம்பிக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் அணிவகுப்பு நடத்தினர். இதனையடுத்து பேரிடர் மேலாண்மை காலங்களிலும், கிணற்றில் விழுந்த மக்களை காப்பாற்றுவது, மலை பகுதிகளில் சிக்கிய மக்களை காப்பாற்றுவது போன்றும் தீயணைப்பு வீரர்கள் சாகச மீட்பு நிகழ்ச்சியை நடத்தினர். பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

Exit mobile version