இந்தியாவுடனான நட்புறவில் தென்கொரியா சிறந்து விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை சந்தித்து பிரதமர் மோடி பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகள் குறித்தும், அதனை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதையடுத்து, இந்தியா – தென்கொரியா இடையிலான வணிகம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுடனான நட்புறவில் தென்கொரியா சிறந்து விளங்குவதாக கூறினார். பிராந்திய விவகாரங்கள் குறித்தும் சர்வதேச பிரச்சனைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளனர். இதையடுத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்காற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நாளை சியோல் அமைதி விருது வழங்கப்படவுள்ளது.