நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான மல்யுத்தப்போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கர்நாடக மாநிலம் கைப்பற்றியது…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தென்னிந்திய அளவிலான, சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்தப்போட்டிகளில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலிருந்து மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிறைவுப் போட்டிகளை, மின் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். ஆண்கள் இறுதிப் போட்டியில் Free Style பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கர்நாட மாநில மல்யுத்த வீரர்கள் வென்றனர். இதேபோல, Greeco Roman பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கர்நாட மாநிலம் வென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் Free Style பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கர்நாட மாநில மல்யுத்த வீராங்கனைகள் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு சுழற்கோப்பைகள், கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.