தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தேர்தல்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஏற்கனவே தலைவராக இருந்த இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக சண்முகமும், பொருளாளராக சுவாமிநாதனும், துணைத் தலைவர்களாக இசையமைப்பாளர் தீனா, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், நடன இயக்குனர் சோபி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட இந்த சங்கம் பாடுபடும் என்று தலைவராக தேர்வாகியுள்ள ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்.

Exit mobile version