தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23ம் தேதி தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் தலமைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் நடைபெற்று வந்ததால் ஆறு மாதங்களுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23ம் தேதி ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version