நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை மொத்தம் 243 பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது..
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாட்டு வீரர் வீராங்கணைகளும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் போட்டிகளில் தற்போது வரை 129 தங்கம் , 74 வெள்ளி, 40 வெண்கலத்துடன் மொத்தம் 243 பதக்கங்களைப் வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. 45 தங்கம், 42 வெள்ளி, 71 வெண்கலத்துடன் மொத்தம் 158 பதக்கங்களை வென்று நேபாளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 32 தங்கத்துடன் மொத்தம் 188 பதக்கங்களைப் பெற்று இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று வரை நடைபெற்ற மல்யுத்தப்போட்டிகளில் இதுவரை 12 பிரிவுகளிலும் தங்கம் வென்று இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.