நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டி டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள நிலையில், விளையாட்டு அரங்கங்களைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத் தலைநகர் காத்மண்டில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக அங்குள்ள பழைய விளையாட்டு அரங்கங்களைச் சீரமைத்து வருவதுடன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. போட்டி தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அரங்கங்களில் பார்வையாளர்கள் அமரும் மாடம் ஆகியவற்றின் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் இன்னும் 4 நாட்களில் பணிகள் முழுமை பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.