இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். மழை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இந்தநிலையில், 2வது நாளான இன்று, மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி அணிக்கு வலுவான நிலையை பெற்றுத் தந்தார். ரோகித் சர்மா சதம் அடித்து 176 ரன்களுக்கு அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் சர்வதேச அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

தனது 5வது ஆட்டத்திலேயே இரட்டை சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால் 215 ரன்கள் எடுத்திருந்த போது எல்கர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து, இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்ரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டநேர முடிவில் தென்னாப்ரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 27 ரன்களுடனும், பூவமா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Exit mobile version