உலககோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலக கோப்பை தொடரில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் 25வது லீக் போட்டியில் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணியும், 4 வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணியும் மோத உள்ளன. நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலுவான அணியாக வலம் வருகிறது. அதேபோல் முன்னணி வீரர்களை கொண்ட ஃபாஃப் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இத்தொடரில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று தடுமாறி வருகிறது. இதுவரை உலக கோப்பையை வெல்லாத இந்த இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. பர்மிங்காமில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் மோதும் இப்போட்டி 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Exit mobile version