பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை அதிக அளவில் நடத்த பாகிஸ்தான் கிரிகெட் போர்டு தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதனையடுத்து, தென் ஆப்ரிக்கா அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. பாகிஸ்தானின் அழைப்பை ஏற்று மார்ச் மாதம் வருவதாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டது. இந்நிலையில், தங்கள் அணி வீரர்கள் அதிக சர்வதேச போட்டியில் விளையாடி வருவதால் மிகுந்த சோர்வில் இருப்பதாகவும், அதனால் மார்ச் மாதம் தங்களால் வர இயலாது எனவும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. இதனால் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்தாகியுள்ளது.