உல்லாச உலகம் பகுதியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பற்றிய ஆச்சர்ய தகவல்களை பார்க்கலாம்..
தென் ஆப்பிரிக்காவின் பெரிய நகரம் Johannesburg… அந்நாட்டிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன.. அரசியல் மற்றும் அரசு தலைநகரங்களாக Pretoria மற்றும் Cape Town வும், சட்டத்தலைநகராக Bloemfontein வும் உள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 6 கோடி ஆகும்.. அவர்களில் 80 சதவிகிதத்தினர் கருப்பினத்தவர்களாகவும், 8 சதவிகிதத்தினர் கலப்பினத்தவர்களாவும், 8 சதவிகிதத்தினர் வெள்ளையினத்தவர்களாகவும், 2.6 சதவிகிதத்தினர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
1910 ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றாலும், அங்கே நிறவெறி தலைவிரித்தாடியது. தென் ஆப்பிரிக்க வராற்றில் மறக்க முடியாத சகாப்தமாக மாறிப்போனது நிறவெறி சட்ட காலகட்டம்.. பெரும் போராட்டங்களுக்கிடையே இச்சட்டத்தில் இருந்து 1994 ல் தான் முழுமையாக விடுபட்டது அந்நாடு.. இந்திய வம்சாவளியை சேர்ந்த பலரும் நிறவெறி போராட்டங்களில் பங்கேற்றனர். வளரும் நாடாக உள்ள தென் ஆப்பிரிக்காவில், இன்னும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் தொடர்கதையாகவே உள்ளன…
தென் ஆப்பிரக்க தேசத்தில் இந்திய வம்சாவளியினர் 12 லட்சத்து 80 ஆயிரம் பேர் உள்ளனர். தென் ஆப்பிரிக்க இந்தியர்களில் வெறும் 40 சதவிகிதத்தினர் மட்டுமே இந்து சமயத்தை பின்பற்றுவோராக உள்ளனர்.. அங்குள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் இந்தியர்கள் மதமாற்றம் செய்யப்படுவதே இதற்கு காரணம்.. .
இந்நிலையில் இஸ்கான் போன்ற அமைப்பினர், அங்குள்ள இந்தியர்களிடையே கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்..
தென் ஆப்பிரிக்காவில் தமிழர்கள் சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர்.. 1860 களில் இவர்கள் வெள்ளையர்களால் தமிழகத்தில் இருந்து அங்கே அழைத்துச்செல்லப்பட்டவர்கள்.. அங்கே அடிமைகளாகவும், விவசாய கூலிகளாகவும் பணியமர்த்தப்பட்டனர்..
அங்குள்ள தமிழர்கள் பெரும்பாலானோரின் பெயர்களில் மட்டுமே தமிழ் உள்ளது.. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழும் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது.. இருந்தாலும் இன்னும் அங்கே தமிழர்களிடையே தமிழ் மொழி சரளமாக மாறவில்லை.. தற்போது யூ டியூப், பேஸ்புக் போன்றவற்றால், தமிழ் அங்கே எளிமையாக சென்றடைய வசதி ஏற்பட்டுள்ளது.. தமிழ் தொலைக்காட்சிகள் சிலவும் அங்கே ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன..
ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விழா நடத்தி கூழ் ஊற்றுவது, புரட்டாசி மாதம் பெருமாளுக்காக இறைச்சி சாப்பிடாமல் விரதம் இருப்பது, முருகனுக்கு காவடி எடுப்பது என தமிழ் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்கள்..