டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றது இந்திய கிரிக்கெட் அணி

இந்தியாவிற்கெதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், ஃபாலோ ஆன் ஆன தென் ஆப்பிரிக்கா 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை அடுத்து இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 254 ரன்கள் குவித்தார். மயங்க் அகர்வால் 108 ரன்களும், ஜடேஜா 91 ரன்களும் குவித்தனர். இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளிசிஸ் 64 ரன்களும் மகாராஜ் 72 ரன்களும் எடுத்தனர். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்பிரிக்கா 275 ரன்களில் சுருண்டது. இதனால், 326 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை ஃபாலோ ஆன் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய 2வது பந்திலேயே, துவக்க ஆட்டக்காரர் மார்க்கரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில், டிப்ரூன் 8 ரன்னிலும் நிதானமாக ஆடிவந்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டூ ப்ளசிஸ், 54 பந்துகளில் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

Exit mobile version