இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராகிறார் சவுரங் கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க பல்வேறு விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்தது. புதிய நெறிமுறைகளின்படி மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவருமான ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

புதிய விதிமுறைகளின் படி ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ச்சியாகப் பதவியில் இருக்க முடியும் என்பதால், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் சவுரங் கங்குலி, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 9 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும்.

Exit mobile version