கோவையில் செயற்கை நீர் ஊற்றுகளுடன், அருவி மற்றும் அதிநவீன பூங்கா 3புள்ளி 22 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று, நாளை திறக்கப்பட உள்ளது
கோவை மாநகர மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாக வ உ சி பூங்கா, காந்தி பூங்கா உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், காந்தி பார்க் பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க 3புள்ளி 22 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய செயற்கை அருவி, வனவிலங்குகளின் உருவ பொம்மைகள், யோகா பயிற்சி மையம், சிறுவர்கள் விளையாட ஸ்கேட்டிங் தளம், செயற்கை நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்காக நாளை திறந்து வைக்கிறார்.