தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 50 வயது உடைய லட்சுமி அம்மாள் என்பவருக்கு அதி நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது . இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்தால் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்க வேண்டிய நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
மூடநீக்கியல் துறைத் தலைவர் மருத்துவர் மணிகண்டன் தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.