தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக அதிநவீன ஆம்புலன்ஸ் சேவை

தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, கோவையில் அதிநவீன தகவல் பரிமாற்ற கருவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகள், ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யப்படும்போது, மருத்துவமனையில் இருந்து கண்காணிப்பதிலும், சிகிச்சை முறைகளை வழிநடத்துவதிலும் சிரமங்கள் இருந்து வந்தன. இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அதிநவீன தகவல் பரிமாற்ற கருவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை, கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை, நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இந்த சேவையை துவக்கியுள்ளது. கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, நவீன ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.

Exit mobile version