சோனியா காந்தியின் 72 வது பிறந்தநாள் -பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியாகாந்தி 72 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் சோனியாகாந்திக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த நன்னாளில் நீண்ட ஆயுளுடன், உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version