ஆடு மேய்ப்பவரின் மகன், நீட் தேர்வில் முதலிடம்

பெரியகுளம் அருகே ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகனான ஜீவித்குமார், நீட் தேர்வில் இந்திய அளவில் 664 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள A. வாடிப்பட்டியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஜீவித்குமார். சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில், அப்போது பெற்ற மதிப்பெண்கள் 198 மட்டுமே. தொடர்ந்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வில் பங்கேற்றார்.

தற்போது, தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எழுநூற்றி 20 மதிப்பெண்ணிற்கு 664 மதிப்பெண்கள் பெற்று, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதல் மாணவராகவும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் ஆயிரத்து 823 வதாகவும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் , நீட் தேர்வில் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஜீவித்குமார் நிரூபித்துள்ளார்.

Exit mobile version