ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால்தான் பாஜகவை சிலர் எதிர்க்கின்றனர்:மோடி குற்றச்சாட்டு

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால்தான், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைப்பதற்காக, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றார். யூனியன் பிரதேசமான தாதர் நகர் ஹைவேலியில் உள்ள சில்வாசாவில், மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் . இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஆட்சிக்காலத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடுகளை மட்டும் தான் காங்கிரஸ் கட்சியினர் கட்டியுள்ளனர் என்றும், ஆனால் தற்போதைய பாஜக அரசு 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை கட்டியுள்ளது எனப்பெருமிதம் தெரிவித்தார். மேலும், பாஜகவிற்கு எதிராக திரண்டவர்கள் கூட, ஒன்றாக இல்லை என்றும், ஊழலுக்கு எதிராக, தான் நடவடிக்கை எடுப்பதாலேயே, பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Exit mobile version