ஐ.பி.எல் 2020 – சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள்

இன்று நடைபெற்று முடிந்த முதல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியிலிருந்து சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்களைப் பார்க்கலாம்!

ஐ.பி.எல். தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள்:

➤ தோனி – 175 போட்டிகள்
➤ கம்பீர் – 129 போட்டிகள்
➤ கோலி – 110 போட்டிகள்
➤ ரோகித் – 105 போட்டிகள்

ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் முதல் பந்தை வீசியவர்கள்:

➤ 2008 – ப்ரவீன் to கங்குலி 
➤ 2009 – கோனி to ஜெயசூர்யா 
➤ 2010 – வாஸ் to திவாரி
➤ 2011 – அப்துல்லா to ஸ்ரீகாந்த் 
➤ 2012 – மலிங்கா to டு பெளெஸிஸ் 
➤ 2013 – ப்ரெட் லீ to உன்முக்த் 
➤ 2014 – ஜாகிர் கான் to கம்பீர் 
➤ 2015 – உமேஷ் யாதவ் to ரோகித் 
➤ 2016 – ஆர்.பி.சிங் to சிம்மன்ஸ்
➤ 2017 – டி மில்ஸ் to வார்னர் 
➤ 2018 – தீபக் சாஹர் to ரோகித் 
➤ 2019 – தீபக் சாஹர் to கோலி 
➤ 2020 – தீபக் சாஹர் to ரோகித்

ரோகித் சர்மா 3 முறை முதல் பந்தினை எதிர்கொண்டுள்ளார்.
தீபக் சாஹர் 3 முறை முதல் ஓவரை வீசியுள்ளார்.

 

ஐ.பி.எல். தொடரின் முதல் பந்து அமைந்த விதம்:

➤ 2008 – லெக் பை
➤ 2009 – 1 ரன்
➤ 2010 – விக்கெட்
➤ 2011 – 0
➤ 2012 – அகல பந்து
➤ 2013 – விக்கெட்
➤ 2014 – 0
➤ 2015 – 0
➤ 2016 – 1
➤ 2017 – 0
➤ 2018 – 0
➤ 2019 – 1
➤ 2020 – பவுண்டரி

ஐ.பி.எல். தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர்கள்:

➤ 2008-ஜாகிர் கான்
➤ 2009 – துசாரா
➤ 2010 – வாஸ்
➤ 2011 – அப்துல்லா
➤ 2012 – ஃப்ராங்லின்
➤ 2013 – ப்ரெட் லீ
➤ 2014 – மலிங்கா
➤ 2015 – மோர்னே மோர்கல்
➤ 2016 – இஷாந்த் சர்மா
➤ 2017 – சவுத்ரி
➤ 2018 – தீபக் சாஹர்
➤ 2019 – ஹர்பஜன் சிங்
➤ 2020- பியூஷ் சாவ்லா

 

ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:

➤ மலிங்கா – மும்பை இந்தியன்ஸ் – 170 விக்கெட்டுகள்
➤ அமித் மிஷ்ரா – டெல்லி கேப்பிட்டல்ஸ் – 157 விக்கெட்டுகள்
➤ பியூஷ் சாவ்லா – சென்னை சூப்பர் கிங்ஸ் – 151 விக்கெட்டுகள்
➤ ஹர்பஜன் சிங் – சென்னை சூப்பர் கிங்ஸ் – 150 விக்கெட்டுகள்
➤ ப்ராவோ – சென்னை சூப்பர் கிங்ஸ் – 147 விக்கெட்டுகள்

2013 முதல் தொடக்கப்போட்டிகளில் தோல் வியையே சந்திக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!

2008ல் தோல்வியுடன் ஆட்டத்தை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 2009 முதல் 2012 வரை வெற்றி பெற்றுள்ளது. 2013-க்குப் பிறகு விளையாடிய முதல் போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

➤ 2013 – vs ஆர்.சி.பி. – 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2014 – vs கே.கே.ஆர். – 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2015 – vs கே.கே.ஆர். – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2016 – vs ஆர்.பி.எஸ். – 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2017 – vs ஆர்.பி.எஸ். – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2018 – vs சி.எஸ்.கே. – ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
(தொடரின் முதல் போட்டியில் சென்னையை எதிர் கொண்டு 165 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஒரு பந்து மற்றும் ஒரு விக்கெட் மீதம் வைத்து வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்)
➤ 2019 – vs டெல்லி கேப்பிட்டல்ஸ் – தோல்வி
➤ 2020 – vs சி.எஸ்.கே. – 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

 

தொடரின் முதல் அரை சதத்தை பதிவு செய்தவர்கள்:

➤ 2008 – மெக்கல்லம்
➤ 2009 – சச்சின்
➤ 2010 – மேத்யூஸ்
➤ 2011 – அனிருதா
➤ 2012 – லெவி
➤ 2013 – ஜெயவர்தனே
➤ 2014 – மனிஷ் பாண்டே
➤ 2015 – ரோகித்
➤ 2016 – ரஹானே
➤ 2017 – ஹென்ரிக்ஸ்
➤ 2018 – ப்ராவோ
➤ 2019 – வார்னர்
➤ 2020 – ராயுடு

 

சென்னை அணியின் 100 வெற்றிக்கு காரணமாக இருந்த தோனி:

➤ 2008-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் வெற்றி.
➤ 2010ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 25 வது வெற்றி.
➤ 2013ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50வது வெற்றி.
➤ 2015ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 75வது வெற்றி.
➤ 2020ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 100வது வெற்றி.

 

மும்பையை அதிக முறை வீழ்த்தியுள்ள அணிகள்:

➤ சென்னை சூப்பர் கிங்ஸ் – 12 முறை
➤ டெல்லி கேப்பிட்டல்ஸ் – 12 முறை
➤ கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 11 முறை

 

தோனியின் இன்றைய சாதனைகள்:

➤ ஐ.பி.எல். போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார் தோனி. அதில், 96 கேட்சுகளை கீப்பராகவும், 4 கேட்சுகளை பீல்டராகவும் பிடித்துள்ளார்.

➤ சென்னை அணியின் கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
➤ 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய 6 போட்டிகளில், ஒன்றில் கூட இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதில்லை.

Exit mobile version