ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ 6.90 லட்சம் மதிப்பில் சோலார் மின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொண்டி, ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய இடங்களிலுள்ள மத்திய சுங்க துறை அலுவலகங்களில் சோலார் மின் வசதியினை சுங்கத்துறை ஆணையர் ரஞ்சன் குமார் ரௌத்திரி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கடலோரப் பகுதிகள் வழியாக நடக்கும் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் சுங்கத்துறை தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறினார். கடந்த ஓராண்டில் மட்டும் 21 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.