டிசம்பர் 26ல் சூரிய கிரகணம்: திருப்பதி, சபரிமலை கோவில்களில் நடை அடைப்பு

சூரிய கிரகணகத்தை ஒட்டி திருப்பதி மற்றும் சபரிமலை கோயில் நடைகள் அடுத்த மாதம் 2 நாட்கள் அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

வரும் டிசம்பர் 26-ஆம் தேதி காலை 8.13 மணி முதல் 11.13 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனையடுத்து, டிசம்பர் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் சூரிய கிரகணத்தை ஒட்டி 13 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதே போல், 26 ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை 4 மணி நேரம் சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version