அழகிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் வருகிற ஞாயிற்றுகிழமை நிகழ உள்ளது, இந்த கிரகணம் எந்தெந்த பகுதிகளில் எந்த அளவிற்கு தெரியும், ஊரடங்கு சமயம் என்பதால் இதனை வீட்டிலிருந்தபடியே எவ்வாறு காணலாம் என்பதை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. 2010 ஜனவரி 15 மற்றும் 2019 டிச. 26ல் நிகழ்ந்த முழு கங்கண சூரிய கிரகணத்தை தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கமுடிந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று 3.28 மணி நேரம் நீடிக்கும் கங்கண சூரிய கிரகணத்தை தமிழகத்தில் பகுதியாக பார்த்து ரசிக்கலாம், முழுமையாக கண்டுரசிக்க முடியாது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இதனை கங்கண சூரிய கிரகணமாக பார்க்க இயலும். சென்னையில் 34%, வேலூரில் 33%, கோவையில் 30%, திருச்சியில் 28%, மதுரையில் 27%, கன்னியாகுமாரியில் 21%, புதுச்சேரியில் 31% பார்க்க முடியும். சூரியனை புவி சுற்றிவரும் பாதை உள்ள தளமும், நிலவு புவியை சுற்றி வரும் தளமும் ஒன்றுகொன்று 5 டிகிரி கோணம் சாய்துள்ளது. நிலவு புவியை சுற்றி வரும் பாதை புவி-சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும் போது அமாவாசையோ, முழு நிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய கிரகணம், சந்திர கிரகணுமும் நிகழும்
நிலவு வெகு தொலைவில் இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவை விட சற்று பெரியதாக இருக்கும். எனவே அப்போது கிரகணம் ஏற்பட்டால் சூரியனை சந்திரனால் முழுமையாக மறைக்க முடியாது. ஒரு கங்கணம் அல்லது வளையம் போல சூரியனின். வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளியே தெரியும் எனவே இதனை கங்கண சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். இப்படி ஒரு கங்கண சூரிய கிரகணம் தான் வருகிற ஞாயிற்று கிழமை நிகழ உள்ளது. இதற்கு முன்னாள் கடந்த 2010 ஜனவரி மாதம் 15லும், 2019 டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்றும் நிகழ்ந்த இந்த முழு கங்கண சூரிய கிரகணத்தை தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பார்க்க முடிந்தது. ஆனால் வருகிற ஞாயிற்றுகிழமை நிகழும் கிரகணத்தை தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணமாகத்தான் பார்க்க முடியும் என்றும் இந்தியாவின் வடமாநிலங்களிலான ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இதனை கங்கண சூரிய கிரகணமாக பார்க்க இயலும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 3 மணி நேரம் 28 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த கிரகணத்தை தமிழகத்தில் சென்னையில் 34 சதவீதமும், வேலூரில் 33 சதவீதமும், கோவையில் 30 சதவீதமும், திருச்சியில் 28 சதவீதமும், மதுரையில் 27 சதவீதமும், கன்னியாகுமாரியில் 21 சதவீதமும், புதுச்சேரியில் 31 சதவீதமும் காணலாம். சென்னையில் காலை 10:22 மணிக்கு துவங்கி பிற்பகல் 01.41 மணிக்கு முடியும், இந்த கிரகணத்தின் உச்சபட்ச நிலையை 11.58 மணிக்கு காணலாம்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த கிரகணம் தெரியும்.
21- ஆம் தேதி நிகழும் இந்த கிரகணத்தை வெறும் கண்களாலோ, தொலைநோக்கி வழியாக பார்க்ககூடாது என்றும், முழு ஊரடங்கு காரணமாக கிரகணத்தின்போது கிரகணத்தை பார்த்து ரசிக்க கோளரங்கத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யவில்லை என்பதால் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே இந்த கிரகணத்தை பார்ப்பதற்கு தயாராக வேண்டும் என கூறுகிறார் பிர்லா கோளரங்க இயக்குனர். வருகிற 21 ஆம் தேதிக்கு பின் மீண்டும் 2031 மே-மாதம் 21 ஆம் நாள் தான் இதேபோன்று கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும், அப்போது மதுரை, தேனி போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வளைய கங்கண சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியும்.