சமூக செயற்பாட்டாளர் முகிலனை பாலியல் வழக்கில் போலீசார் கைது செய்தனர்
சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி திடீரென மாயமானார்.முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. 140 நாட்களாக முகிலனை, சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், திருப்பதியில் இருந்த முகிலனை, ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காலை முதல் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், முகிலன் மீது நாமக்கலைச் சேர்ந்த பெண் ஒருவர் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தனது புகாரில் கூறியிருந்தார். இதன் பேரில் 3 பிரிவுகளின் கீழ் முகிலன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், முகிலனை பாலியல் வழக்கில் கரூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். முகிலனை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸிலின் துரை முன்பாக ஆஜர்படுத்தவுள்ளனர். முகிலனை கரூருக்கு அழைத்துச் செல்லவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்