தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கூடுதல் தளர்வில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் நோய் பரவல் மீண்டும் அதிகரிக்க காரணமாகி விடும் எனக் கூறியுள்ள சமூக ஆர்வலர்கள் கொரோனா காலத்திலும் டாஸ்மாக் மூலம் வருவாய் ஈட்டுவது முக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால், மதுப்பிரியர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், நோய் பரவலை அதிகரிக்க அரசே வழிவகை செய்யக் கூடாது என வலியுறுத்தியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version