சர்வதேச நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட தயக்கம் காட்டி வரும்வேளையில் பாகிஸ்தான் உலகின் மிகப் பாதுகாப்பான பகுதி பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
கடந்த 2009-ல் பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்டில் பங்கேற்பதற்காக மைதானம் சென்ற இலங்கை அணி வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் காவல்துறையினர் எட்டு பேர் கொல்லப்பட்டனர். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. சமீபகாலமாகத்தான் டி20, ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அங்கு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரான கிரிஸ் கெய்ஸ் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடு எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சை சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கேலி செய்து வருகின்றனர்