தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் இல்லை -சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவிலிருந்து தமிழகத்திற்கு இதுவரை 36 பேர் வந்துள்ளதாகவும், அவர்களில் 32 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மீதமுள்ள 4 பேரின் மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

Exit mobile version