ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் டோடா உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக காணப்படும இந்த பனிப்பொழிவால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் பனிப்பொழிவு தங்களுக்கு புதிய அனுபவத்தையும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜௌரியின் கோத்ராங்கா புதால் மற்றும் டிகேஜி பகுதிகளில் காணப்படும் புதிய பனிப்பொழிவால் அப்பகுதிகளின் சாலைகள் மிகவும் அழகாக காணப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்தவர்களும் இந்த பனிப்பொழிவை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர். பனியை ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து குதூகலமாக விளையாடுகின்றனர்.