மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அரசு பேருந்துகளா இல்லை தனியார்
பேருந்துகளா என்ற சந்தேகம் அளிக்கும் வகையில் விடியா திமுக அரசின்
போக்குவரத்து துறை செயல்பட்டு வருகிறது சென்னை முழுவதும் மாநகர போக்குவரத்துகழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள்விளம்பரம் செய்துள்ளன ஒரு புறம் நகை கடன் கொடுக்கும் நிறுவனம் மாநகரப்பேருந்துகள் முழுவதும் விளம்பரம் செய்துள்ளன இது மாநகரப் பேருந்தா அல்லதுவிளம்பரப் பேருந்தா மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் புகைப்படக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களும்
மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களும் செய்யப்படுவது வழக்கம்
ஆனால் மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மது குடிப்பதை அதிகரிக்கும்
வகையில் தற்போது விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
எஸ்என்ஜே என்ற மதுபான நிறுவனத்தின் விளம்பரங்கள் மாநகரப் போக்குவரத்துக் கழகபேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளன தனியார் நிறுவனங்களே செய்யாத விளம்பரத்தை அரசு மாநகரப் போக்குவரத்து கழகங்களில் செய்யப்பட்டுள்ளது சென்னையில் உள்ளமூவாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் பிரபல மதுபான நிறுவனமான எஸ் எம் ஜி நிறுவனத்தின் பீர் மற்றும் பிராந்தி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாணவ சமுதாயம் இளைஞர் சமுதாயம் மதுபோதையால் சிக்கி சீரழிந்து வரும் நிலையில் மதுபானத்தை குடிக்க வேண்டும் என்றஎண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் விடியா திமுக அரசின் போக்குவரத்து துறைமாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் விளம்பரம் செய்துள்ளது.
மாணவர்கள் இளைஞர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லும் வகையில் எவ்வளவு வாசகங்கள்இருந்தாலும் அவர்களின் கண்களை உறுத்தும் வகையில் இந்த மதுபான விளம்பரங்கள் இருந்து வருவது எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தை மது போதையில் தள்ளாட வைக்கும்வகையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே மாநகரப் போக்குவரத்து கழகங்களில் தனியார் ஓட்டுநர்கள் தனியார்
பேருந்துகளை இயக்க முடிவெடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து
துறை விளம்பரங்கள் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் வகையில் மதுபான
நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு காசுக்காக என்ன விளம்பரங்களை
வேண்டுமானாலும் போடலாம் என்ற செயல்பட்டு வருவது தான் விடியா திமுக அரசின்
திராவிட மாடல் ஆட்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Discussion about this post