சேலம் மாவட்டம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பாம்புகள் உலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கலர்காடு மற்றும் களர்பட்டி ஆகிய கிராமங்களில் மிகக்கொடிய விஷத்தன்மை கொண்ட, கண்ணாடி விரியன் பாம்புகள் உலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அப்பகுதியினரின் கிணற்றில் ஏராளமான பாம்புகள் இருப்பதால், நீரை எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் இந்த பாம்பைமீட்டு, வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்று பாம்புகள் குடியிருப்புப்பகுதிகள் இருக்கும் பகுதிக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.