டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பு..மதுப்பிரியர்கள் கூச்சல்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், அரசு மதுபானக்கடையில் பாம்பு புகுந்ததால், மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போட்டுகாடு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான மதுபானக்கடையில், வேலை பார்க்கும் ஊழியர் தாமரை என்பவர், மதுபாட்டில்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், பாம்பு ஒன்று அவரை கடிக்க பாய்ந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ஊழியர் வனத்துறையினருக்கு தகவலளித்துள்ளார். விரைந்து வந்த வனத்துறையினர் 8 அடி சாரை பாம்பை பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.

YouTube video player

Exit mobile version