பஸ் ஸ்டாண்டா? ‘BAR’ ஸ்டாண்டா? விடியா ஆட்சியில் 24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக்!

விடியா ஆட்சியில், சென்னை அடுத்த செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 24 மணி நேரமும் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் மது பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விடியா ஆட்சியில், குடிகாரர்களின் நிலையமாக பேருந்து நிலையம் மாறியது எப்படி என்பதை பார்க்கலாம்.

24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் பாரில் இருந்து காலை ஆறு மணிக்கே மதுபானங்களை வாங்கிச்செல்லும் காட்சி தான் இவை.

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தின் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கடையில் இருந்து எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ காட்சி.
பரபரப்பான சாலையில் உள்ள இந்த பேருந்து நிலையம் இயங்கும் இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாலை நேரங்களில் மதுபானம் வாங்க வரும் மதுபிரியர்கள், சாலையிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி மதுப்பிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். பணியை முடித்துவிட்டு பேருந்தில் வீடு செல்ல பேருந்து நிறுத்தத்தை நாடி சென்றால், அங்கு குடிகாரர்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும், போதையில் சொல்லமுடியாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலையத்தில் படுத்துக்கொண்டு அசுத்தம் செய்யும் மது பிரியர்கள் குறித்து புகார் அளித்தாலும் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என கவலை தெரிவிக்கிறார்கள் அங்குள்ள கடை உரிமையாளர்.

தன்னிலை அறியாத குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் வார்த்தைகள் கேட்க முடியாத அளவிற்கு இருக்கும் என கூறும் பெண்கள், இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என விடியா அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிலையமா அல்லது குடிகாரர்கள் நிலையமா என்பது தெரியாத வகையில், குடிகாரர்களின் ஆக்கிரமிப்பில் பேருந்து நிலையம் மாறிவருவது, விடியா திமுக அரசின் மற்றும் ஒரு சாதனை.

Exit mobile version