ஓசூர் பகுதிகளில் பணத்திற்காக நகைக்கடைக்காரர்கள் அடுத்தடுத்து கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும், உமரம் என்பவர் பண்ணை வீடு வாங்குவதற்காக காரில் சென்ற போது, காரில் வந்த 8 பேர் பணத்திற்காக அவரை கடத்த முயன்றுள்ளனர். அப்போது கூச்சலிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து சென்ற உமரம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட மன்சூர் அலி கான் உட்பட 8 இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று கடத்தலில் ஈடுபட்ட மேலும் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.