திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 53 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒருவரை கைது செய்தனர். 

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருவாரூரைச் சேர்ந்த சுலைமான், திருச்சியைச் சேர்ந்த பஷீர் அகமது ஆகியோர் கடத்தல் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 53 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ எடையுள்ள 21 தங்க கட்டி மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில் பஷீர் அகமதுவை அதிகாரிகள் கைது செய்தனர்.

Exit mobile version