பாமக வேட்பாளர் சாம் பால்-ஐ ஆதரித்து ஸ்மிருதி இரானி பிரசாரம்

அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளரான சாம் பாலை ஆதரித்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சென்னை பூக்கடை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கு இன்னும் பல திட்டங்களை பிரதமர் மோடி கெண்டு வர உள்ளதாகவும் தங்களுடைய கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் சாம் பாலுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version