பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு: மத்திய அமைச்சர்

பாலியல் மற்றும் போக்சோ தொடர்பான வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பாலியல் வழக்குகள் மற்றும் போக்சோ குற்றங்களில் இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் காக்கும் சட்ட வழக்குகள் ஆகியவற்றுக்காக, நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை 767 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு 474 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாகவும், எஞ்சிய தொகை மாநில அரசுகள் ஒதுக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

Exit mobile version