கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100 நகரங்களை, உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன், அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைந்த நகரமாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர்மிகு நகரங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த பணிகளில் 47 சதவீத அளவுக்கு செயலாக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முழுவீச்சில் நடைபெற்ற பணிகள் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இவற்றில், சென்னை, கோவை ஆகிய மாவட்டங்கள் முதன்மை வகிக்கின்றன.அடுத்தப்படியாக மத்திய பிரதேசத்தில் இந்தூர்,போபால், உஜ்ஜைன் ஆகிய நகரங்களும், குஜராத்தில் சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களும் அதிகளவில் திட்ட செயலாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக மற்ற நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
((கோப்புக்காட்சி))
((ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்
கடந்த அதிமுக ஆட்சியில் முழு வீச்சில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்
ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாகத்தில் சென்னை, கோவை முதன்மை வகிக்கின்றன
கொரோனா, நிதி நெருக்கடியால் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் தொய்வு))